Kaariyam Yaavum || Tamil Lyrical Video || Vijay Musicals || Singer : Krishnaraj || Video : Kathiravan Krishnan || Music : Kanmaniraja || Composer : Senkathirvanan
Lyrics :
காரியம் யாவும் கனிவாய் மாறும்
கணபதி அருளால் நலமே சூழும்
சூரிய ஒளிபோல் இதயம் ஒளிரும்
சொல்லினில் அடங்கா நல்லருள் தொடரும்
வானமும் பூமியும் வணங்கிடும் பெருமை
நிறைந்தவன் அவனை நினைத்திருப்போமே
ஆனையின் முகத்தை பெற்றதனாலே
அத்தனை பலத்தை நமக்களிப்பானே
பார்வதிதேவி முகத்தின் ஒளியில்
தோன்றிய பாலன் ஞானத்தின் ரூபன்
யாரவன் பேரை சொல்லிய போதும்
காத்தருள் செய்யும் கணபதிநாதன்
பிணிகளை தீர்த்து வாழ்வளிப்பானே
பிறவிகள் தோறும் துணைவருவானே
மாறாக் கருணை செய்திடும் அவனை
மனத்தால் நினைத்து வளமடைவோமே
Ещё видео!