Lingashtakam sanskrit translation in tamil by Smt M.R.Vijaya
ப்ரம்மனும் மாலும் பூஜித்த லிங்கம்
களங்கமில்லா ஜோதி சுடர் லிங்கம்
பிறவிப் பெரும் துயர் களைத்திடும் லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
தேவர்கள் முனிவர்கள் அர்ச்சித்த லிங்கம்
காமனை எரித்த கருணை உரு லிங்கம்
இராவணன் அகந்தையை அடக்கிய லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
அனைத்து மணமும் திகழ் அலங்கார லிங்கம்
அறிவாற்றலின் காரணம் ஆன லிங்கம்
தேவர்கள் அசுரர்கள் தொழுதிடும் லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
பொன் மணி மாணிக்க லிங்கம்
நாகரை அணிந்தொளி வீசிடும் லிங்கம்
தஷ்ஷிணன் யாகம் தகர்த்திய லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
குங்கும சந்தன அலங்கார லிங்கம்
கமலா மலர் மாலை சூடிய லிங்கம்
கர்மாவினை யாவும் களைந்திடும் லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
அமர கணங்கள் அர்ச்சிக்கும் லிங்கம்
பக்தி உணர்வின் ஊற்றான லிங்கம்
கோடி சூரிய ஒளி ப்ரகாச லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
எட்டிதழ் தாமரை சூழ்ந்திட்ட லிங்கம்
அனைத்திற்கும் காரணமாகிய லிங்கம்
ஏழ்மைகள் யாவும் அகற்றிடும் லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
தேவாதி தேவர்கள் பூஜிக்கும் லிங்கம்
தேவவன மலர்பூஜை ஏற்றிடும் லிங்கம்
மாபெரும் பரமாத்ம உருவான லிங்கம்
நான் தினமும் வணங்கும் சதா சிவ லிங்கம்
லிங்காஷ்டகம் இதனை சிவ சன்னிதானத்தில் துதிப்போர்கள் அனைவரும் சிவலோக தரிசனமும் சிவனருள் தோழமையும் பெற்றிடுவார்
![](https://i.ytimg.com/vi/8WZvxRE1qes/maxresdefault.jpg)