சிக்கன் கறி | One Pot Chicken Curry In Tamil | Pressure Cooker Chicken Curry | Easy Chicken Recipe | Chicken Gravy | Chicken Masala | Side Dish | Lunch Recipes
#சிக்கன்கறி #onepotchickencurry #chickencurry #pressurecookerchickencurry #chickengravy #chickenmasala #chickenrecipes #chicken #சிக்கன் #hemasubramanian #homecookingtamil #cuisine #indianfood #food #cooking #tasty #yummy
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
One Pot Chicken Curry: [ Ссылка ]
Our Other Recipes:
கொல்கத்தா ஸ்டைல் சிக்கன் பர்த்தா: [ Ссылка ]
ஸ்பெஷல் சிக்கன் ப்ரை: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
சிக்கன் கறி
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊற வைக்க
சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
சிக்கன் கறி செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
வெங்காயம் - 4 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 4 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
2. இதை 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3.குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு
மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
4.பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்
நிறமாகும் வரை வதக்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.
6. உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
7. பின்பு தனியா தூள், சீரக தூள், சேர்த்து நன்கு கலக்கவும்.
8. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
9. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
10. சிக்கன் கறி தயார்.
11. இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி சாதத்துடன்
சிக்கன் கறியை சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!