Vinnaalum Devarkku || Payan Migu Pathigangal || Pazhani K Venkatesan || Vijay Musicals || Tamil Lyrical Video || Video : Kathiravan Krishnan || விண்ணாளும் தேவர்க்கு || பயன் மிகு பதிகங்கள் || பழனி K வெங்கடேசன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பாடல்வரிகள் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்
கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்
Ещё видео!