Title: Mannan
Starring: Rajinikanth, Vijayashanti, Kushboo, Goundamani, Manorama, Visu
Music: Ilayaraja
Direction: P.Vasu
Song : Amma Endru
Singer: K. J. Yesudas
Lyrics: Vaali
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
அபிராமி சிவகாமி மகமாயி கருமாரி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனகென்றும்
அது போதுமே
அடுத்து இங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாக பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
பசுந்தங்கம் புதுவெள்ளி
மாணிக்கம் மணி வைரம்
அவையாவும் ஒரு
தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்து
கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு
எனைத்தாங்கி நீ பட்ட
பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயர்வில்லையே
![](https://i.ytimg.com/vi/bAw7St4KNxs/maxresdefault.jpg)