உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்

உலகத்தில் நான் ....
காணாப் பேரோளியே கல்புக்குள் நிறைந்தவனே
ஏனென்னை மறந்துவிட்டாய், ஏங்கியேத் துடிக்கவைத்தாய்
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
வானோர்த் தொழுபவனே வள்ளளலே ரஹ்மானே
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
ஆயிரம் கோடிகளாய் அடியார் உனக்கு உண்டு
ஆயினும் எனக்கு இங்கே அதிபதி நீதானே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
புர்ஷிலும் குளிர்ந்தவனே கோமான் ரஹ்மானே
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
அருள் மழைப் பொழிபவனே, ஆகிரத் அதிபதியே
இறுதி நபி இதழில் எழில் மறைப் பொழிந்தவனே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
பாவல் நீ யா அல்லாஹ் பண்ணே ரஹ்மானே
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்....
![](https://i.ytimg.com/vi/eFcHXjXhQFY/maxresdefault.jpg)