மிகவும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யவும் @ [ Ссылка ]
ஆம்லெட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் முட்டை ஆம்லெட் கறி ஒரு தனி சுவை மிகுந்த ரெசிபி. மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான முட்டை ஆம்லெட் கறி செய்து உண்டு மகிழுங்கள். இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
முட்டை ஆம்லெட் கறி செய்ய தேவையான பொருட்கள்:
ஆம்லெட்:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலைகள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - ¼ டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கிரேவி:
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
சீரகம் - ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 ½ டீஸ்பூன்
செய்முறை:
1. தேங்காய், சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
2. ஆம்லெட் செய்ய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கிக்கொள்ளவும்.
3. ஒரு நான்ஸ்டிக் பான்-இல் , ஆம்லெட் கலவையை ஊற்றி கொள்ளவும். ஒரு பக்கம் சமைத்த பின்பு, கரண்டி வைத்து திருப்பி மறுபக்கத்தையும் சமைக்கவும். ஆறவைத்து நீட்டான துண்டுகளாக வெட்டி கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. கிரேவி செய்ய , ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். வெட்டிய வெங்காயத்தை, மிதமான சூட்டில் வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை சமைக்கவும். அரைத்து வாய்த்த பேஸ்ட் சேர்த்து மேலும் 4 நிமிடத்திற்கு வதக்கவும்.
5. பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கவும். எலுமிச்சை சாறு, 400 மிலி தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
6. கொத்தமல்லி இலை மற்றும் வெட்டி வாய்த்த ஆம்லெட் துண்டுகளை சேர்க்கவும். குறைந்த தீயில் மேலும் 3 நிமிடத்திற்கு சமைக்கவும்.
7. சூடாக சப்பாத்தி அல்லது ரொட்டி உடன் பரிமாறவும்.
உங்கள் சமயலறைக்கு மிகவும் அதிக தரமான சமையல் பாத்திரங்கள் வாங்க இந்த லின்கை கிளிக் செய்து Cookd ஷாப்பில் வாங்குங்கள் - [ Ссылка ]
எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் - [ Ссылка ]
எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் - [ Ссылка ]
எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் - [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/fh83SJzWWK8/maxresdefault.jpg)