பாடல் : நினைப்பது நிறைவேறும் || பாடியவர் : பிரபாகர் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : பைரவர் || தமிழ் பக்தி பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
Song : Ninaippathu Niraiverum || Singer : Prabhakar || Lyrics : Senkathirvanan || Music : Sivapuranam D V Ramani || God : Bhairavar || Tamil Devotional Songs || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#Bhairavarsongstamil#Theipiraiashtamisongs#VijayMusicals
பாடல்வரிகள் || LYRICS :
நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
கண்ணா எங்களை காப்பவனே உன்னை என்றும் மறவேனே
க்ஷேத்ர பலனே நலம் வழங்கும் ஈசனே
நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
அடியவர் போற்றும் பைரவனே ஆனந்த வாழ்வு தருபவனே
திருவடி நாளும் வணங்கிடுவோம் கவலைகளெல்லாம் மறந்திடுவோம்
உன்னை நினைத்து தொடங்கும் எதுவும் வெற்றியாகுமே
துன்பம் துயரம் தொல்லைகளெல்லாம் விரைந்து ஓடுமே
உன்னைத்தான் கேட்கிறேன் மௌனமாய் இருக்கத் தகுமோ
கண்கள் கசிந்து உள்ளம் சிலிர்த்து வணங்குவேனே
கயிலைநாதன் உந்தன் புகழை முழங்குவேனே
முக்கண்ப் படைத்த செஞ்சடையானே காலபைரவா
முன்வினைத் தீர்க்க நல்வினை சேர்க்க நேரமல்லவா
உன்னை நான் பாடினால் நெஞ்சிலே அச்சம் வருமோ
தேய்பிறை அஷ்டமித் திதியில் உன்னை வணங்குவேனே
தேவைகளெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டுவேனே
எதிரியின் அச்சம் எளிதில் நீங்கும் உன்னை வேண்டினால்
ஏற்றம் வாழ்வில் நாளும் சேரும் உன்னை நாடினால்
உன்னை நான் போற்றினால் விதியும் என்னைத் தொடுமோ
ஆயிரம் பிறவி நானும் எதுத்து வணங்குவேனே
அம்பலவாணன் உந்தன் பெருமை முழங்குவேனே
![](https://i.ytimg.com/vi/h9Ufy9rSdok/maxresdefault.jpg)